சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 4 | Tips for healthy Sex - Doctor Vikatan | டாக்டர் விகடன்

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 4

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டி.நாராயண ரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்

`அழுக்குத் தீரக் குளித்தவனுமில்லை; ஆசை தீர அனுபவித்தனுமில்லை’ என்று ஒரு பழமொழி உண்டு. வாழ்வின் இறுதி விநாடி வரை தீராதவை செக்ஸ் குறித்த சந்தேகங்கள். காதல், கவர்ச்சி, இன்பம், இணைப்பு, இனப்பெருக்கம், நிறைவு இவற்றில் எதை செக்ஸுக்கான விளக்கமாக எடுத்துக்கொள்வது?  புகழ்பெற்ற தத்துவ அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்டு, `எல்லோருடைய பலவீனமும்  பலமும் செக்ஸ்தான்’ என்கிறார். அது, வாழ்வில் பிரிக்க முடியாதது, தவிர்க்க முடியாதது. அது இல்லையென்றால், உலகம் உயிரினங்களற்ற, உயிரற்ற ஓர் உருண்டை. அவ்வளவுதான். அப்படிப்பட்ட பெருமைக்குரிய செக்ஸை நாம் எவ்வளவு மோசமாகப் புரிந்துவைத்திருக்கிறோம் என்பதே வேதனையான ஒன்று. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம்... என அத்தனைத் துறைகளும் அபார முன்னேற்றம் அடைந்திருக்கும் இந்தக் காலத்திலும், செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகள்தான் நம்மை, குறிப்பாக இளைஞர்களை ஆட்டிப்படைக்கின்றன; 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick