ஸ்டார் ஃபிட்னெஸ்: வொர்க் அவுட்டில் எப்போதும் தனி ஒருவன்!

ஜெயம் ரவியின் ஜிம் சீக்ரெட்ஸ்

‘‘என் முதல் படத்துல நான் நடிக்கும்போது ஃபிட்னெஸ் மேலே பெருசா எந்தக் கவனமும் காட்டினதில்லை. ரெண்டாவது படத்துல இருந்து இப்போ வரைக்கும் ஃபிட்னெஸுக்கு அதிகநேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செஞ்சுக்கிட்டு வர்றேன். ரிலீஸுக்கு ரெடியா இருக்கிற ‘டிக் டிக் டிக்’ படத்துக்காக என் பிட்னெஸுக்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கேன்’’ - ஆர்ம்ஸ் காட்டிப் பேச ஆரம்பிக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.

‘‘டிக் டிக் டிக்’ படத்துல நடிக்க, ‘என் வெயிட்டைக் குறைக்கணும்’னு டைரக்டர் சொல்லிட்டார். ‘வனமகன்’ படத்துக்காக ஏற்கெனவே கொஞ்சம் வெயிட் குறைச்சிருந்தேன். அதனால, இந்தப் படத்துக்கு அதையே மெயின்டெயின் பண்ணினேன். ஆனா, மெயின்டெயின் பண்றதுதான் பெரிய விஷயமாயிருந்துச்சு. புரோட்டீன் அதிகமா இருக்கிற உணவுகளை அதிகமா சாப்பிட்டேன். கீரை வகைகள் எப்போதும் உடம்புக்கு நல்லது. அதனால, என் சாப்பாட்டில் எப்போதும் கீரையை வைக்க என் மனைவி ஆர்த்தி மறக்கவே மாட்டாங்க. தினமும் கீரை  சாப்பிடப் பழகினால் முகமும் பொலிவாத் தெரியும். காய்கறிகளில் அதிகமா கேரட், தக்காளி சாப்பிடுவேன். அடிக்கடி பப்பாளி ஜூஸ் குடிப்பேன். என் ஃபிட்னெஸ் ட்ரெயினர் என்னை, ‘அதிகமா தண்ணீர் குடிங்க பாஸ்’னு சொல்வார். என் எனர்ஜி ரகசியங்களில் இதுவும் ஒண்ணு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick