நோ ஸ்மோக்கிங் - அந்த நாள்... எந்த நாள்?

சுதா மணி, மனநல ஆலோசகர்

“காலைல ஒரு தம் அடிச்சாத்தான் காலைக்கடனையே கழிக்க முடியும்...”, “சாப்பிட்டு முடிச்சவுடனே  கட்டாயம்  தம் அடிச்சாகணும்; இல்லைன்னா தலையே வெடிச்சுரும்”, “நமக்கு டீ, காபி எல்லாம் வெறுமனே உள்ள இறங்காது, கூடவே ஒரு ‘தம்’ போட்டாகணும்...” - இது  சிகரெட் பழக்கமுள்ள சிலரின் வாக்குமூலங்கள். “நீங்கள் ஏன் சிகரெட் பிடிக்கிறீர்கள்...” என்று கேட்டால், அவர்கள் இதுபோன்று பல காரணங்களைச் சொல்வார்கள்.

புகைபிடிப்பது என்பது பிறவிப்பழக்கம் அல்ல... ஆனாலும், அந்தப் பழக்கத்துக்கு ஆளானவர்கள் விளையாட்டாகவோ, ஒருமுறை பிடித்துத்தான் பார்ப்போமே  என்றோதான் ஆரம்பித்திருப்பார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்துவிடுகிறது.  புகைப்பழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர எத்தனையோ சட்டங்கள் போட்டும், விழிப்பு உணர்வு ஊட்டியும் பெரிதாகப் பலனளிக்கவில்லை. அடுத்தடுத்த தலைமுறைகளில் அது அதிகரித்தபடியே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick