ஜீரோ ஹவர்!

ஹெல்த் - 3

ட்டமோ  யோகாவோ தியானமோ உடலை வருத்தக்கூடிய, ஒரு புதிய நல்ல பழக்கத்தை உருவாக்குவது அத்தனை சுலபமல்ல. அதை முதலில் ஏற்றுக்கொண்டால்தான் எந்தப் புதிய உடற்பயிற்சிக்கும் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். நாம் நல்ல பழக்கங்களை உருவாக்குவது மிகச் சுலபம் என நினைக்கி றோம். உடற்பயிற்சிகளைவிடக் கடினமானது தொடர்ந்து நீடித்து அந்தப் பயிற்சிகளைச் செய்வது.  ஏன் தெரியுமா? எந்தப் பயிற்சியும் 45 நாள்களுக்குப் பிறகுதான் கொஞ்சமாவது ரிசல்ட் கொடுக்கும். ஆனால், நாலு மீட்டர் நடந்ததும் தொப்பையைத் தடவிப்பார்த்து,  ‘என்ன இன்னும் குறையல’ என ஏங்குகிற ஏரியா ஆட்கள் எக்கச்சக்கம்!

சரி, இதை எப்படி எதிர்கொள்வது..?  அதற்கு முதலில்,  ஏன் பழக்கங்களை நம்மால் தொடர முடிவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

* உடனடியாகப் பலனை எதிர்பார்ப்பது. அது நடக்காதபோது சோர்ந்து போவது.

ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வதால் உண்டாகும் சலிப்பு.

சின்னச் சின்ன வலிகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் போவது.

உடல் மற்றும் மன மாற்றங்களால் சோர்வடைவது.

ஆரம்பத்தில் இருக்கிற எனர்ஜியும் ஆர்வமும் குறைந்து போவது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick