இனி டயாலிசிஸ் தேவையில்லை!

ஹெல்த்

`உண்ட உணவு உடலிலேயே தங்கிவிட்டால் அது விஷம்’ என்பதுண்டு. உடலின் சுத்திகரிப்பு வேலையைத் திறம்படச் செய்வது சிறுநீரகம். அந்தச் சிறுநீரகம் பழுதடைந்தால் பதற்றம் தொடங்கிவிடும். மாற்றுச் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறவர்களுக்குப் போதுமான அளவு கொடையாளர்களும் இல்லை. அதனால் பலர் டயாலிசிஸ் சிகிச்சையில்தான் வாழ்நாளை நீட்டிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

டயாலிசிஸ் என்பது குறுகியகால சிகிச்சை மட்டுமே. இது நிரந்தரத் தீர்வாக இருக்க முடியாது. இதைச் சரிசெய்யவே, உலகின் முதல் செயற்கை சிறுநீரகம் அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ரத்த ஓட்டத்திலிருந்து கழிவுகளை வடிகட்டுவதற்காக மனித இதயத்தின் துணையுடன் இயங்கும் சிறப்பு மைக்ரோசிப்களின் கூட்டாகும். கொடையாளரின் சிறுநீரகத்தைப் பிறருக்குப் பொருந்துவதில் சில சிக்கல்கள் வரலாம். மற்றும் திசு நிராகரிப்பு என்னும் சிக்கலும் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சையில் உண்டு. இது போன்ற சிக்கல்களைத் தவிர்க்கிறது செயற்கை சிறுநீரகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick