நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 9 | Natural healthy food - Significance of Rice - Doctor Vikatan | டாக்டர் விகடன்

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 9

குடும்பம்போப்பு, மருத்துவ எழுத்தாளர்

மிழகத்தில் ஆற்றுப் பாசனமும் வளமையான ஏரிப் பாசனமும் இருந்த பகுதிகளில் மட்டுமே ஆண்டுக்கு ஒன்றிரண்டு போகம் நெல் பயிரிட்டு  வந்தனர். இந்தப் பகுதி மக்கள் தான் முதன்மை உணவாக அரிசியை ஏற்று வந்தனர். மற்றபடி பெரும்பாலான பகுதிகளில் உணவின் ஆதாரமாக இருந்தவை சிறு தானியங்களே.

பசுமைப் புரட்சியை அடுத்து நெல் பயிரிடுதல் பரவலாகியது. அனைத்தையும் ஏகபோகப் படுத்தவே திட்டமிட்டு நெல்லைப் பரவலாகப் பயிரிட வைத்தனர். பசுமைப் புரட்சியை அடுத்து சிறுதானியங்கள் பயிரிடும் பரப்பு குறைந்துகொண்டே வந்தது. பசுமைப் புரட்சியில் பெருந்தானியங்களை ஏகபோகப்படுத்துவது வெளிப்படையான திட்டம். அதற்குள் சிறுதானியங்களை ஒழித்து நமது உடலின் வலுவைக் குன்றச் செய்யும் சதியும் அடங்கி உள்ளது. இதுவொரு மறைமுகமானப் போர். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அரிசி விலையில் பாதியாக இருந்தன சிறுதானியங்கள். உடல்நலம் குறித்த கவனம் மேலோங்கி வரும் இன்று சிறுதானியங்களின் உற்பத்தி குறைந்து விட்டதால் அவற்றின் விலை அரிசியின் விலையைப்போல் இரண்டு மடங்காகி விட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick