பிளாக் டீ... பிரியாணி... கொஞ்சம் பழங்கள்... நிறைய தூக்கம்... | Fitness secrets of actress Mahima Nambiar - Doctor Vikatan | டாக்டர் விகடன்

பிளாக் டீ... பிரியாணி... கொஞ்சம் பழங்கள்... நிறைய தூக்கம்...

மஹிமா நம்பியாரின் ஃபிட்னெஸ் மந்திரங்கள்!ஃபிட்னெஸ்

‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மஹிமா நம்பியார். ‘குற்றம் 23’, ‘புரியாத புதிர்’, ‘கொடிவீரன்’ எனப் பல படங்களில் தன் நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்திருப்பவர். அவரைப் போலவே சிம்பிளாக இருக்கிறது அவர் சொல்லும் ஃபிட்னெஸ் சீக்ரெட்!

‘நான் நிறைய சாப்பிடுற டைப் கிடையாது. அதனாலேயே எப்போதும் சின்னப்பொண்ணு மாதிரி தெரியறேன்னு நினைக்கிறேன். நடிக்க வந்த புதுசுல ஹெல்த் விஷயத்துல கவனம் செலுத்தினதில்லை. தொடர்ந்து படங்கள் பண்ணும்போதுதான், அதோட முக்கியத்துவம் எனக்குத் தெரிய ஆரம்பிச்சது. என்னோட உணவுமுறை கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். பால் உணவுகளை எடுத்துக்கவே மாட்டேன். அதனாலேயே டீ, காபி குடிக்கிற பழக்கம் எனக்குக் கிடையாது. பால் சேர்க்காத க்ரீன் டீயும் பிளாக் டீயும்தான் என் சாய்ஸ்.

எனக்குப் பிரியாணி ரொம்பப் பிடிக்கும். எப்பல்லாம் பிரியாணி சாப்பிடணும்னு தோணுதோ, அப்பல்லாம் சாப்பிடுவேன். ஆனால், அதுக்குப் பிறகு நான் எடுத்துக்கிற சாப்பாடு உடம்பு வெயிட் போடாதமாதிரிப் பார்த்துப் பார்த்துச் சாப்பிடுவேன். சாப்பாட்டு விஷயத்துல எனக்கு நானே ஒரு வரையறை வெச்சிருக்கேன். கிடைக்கிற எல்லா உணவுகளையும் சாப்பிடமாட்டேன். ஆரோக்கியமான உணவுகளைத் தேடித் தேடிச் சாப்பிடுவேன். அந்த வகையில் புரோட்டீன் உணவுகள் உடம்புக்கு ரொம்ப முக்கியம் என்பதால என் உணவில் எப்போதும் புரோட்டீன் ரிச்சா இருக்கும். அடிக்கடி பழங்கள் சாப்பிடுவேன். ஷூட்டிங் ஸ்பாட்ல பழங்களைச் சாப்பிட முடியலைனா ஜூஸ் குடிப்பேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick