கணவர் அளித்த புற்றுநோய் கடந்து வந்து சாதிக்கும் நளினி! | Lady steps up cancer fight with self confidence - Doctor Vikatan | டாக்டர் விகடன்

கணவர் அளித்த புற்றுநோய் கடந்து வந்து சாதிக்கும் நளினி!

தன்னம்பிக்கை

‘அருவி’ திரைப்படத்தில் ‘சிகரெட் புடிக்காதீங்கப்பா, நாத்தம் அடிக்குது’ என்று மகள் கேட்டுக்கொண்டவுடன் அப்பா சிகரெட்டைத்  தன் வாழ்விலிருந்தே தூக்கி எறிந்துவிடுவார். ஆனால், நிஜ வாழ்க்கையில் மனைவி, பிள்ளைகள் மன்றாடியும் அந்த ஆறாவது விரலை விடாத ஆண்களே அதிகம். அப்படித்தான் நளினியும் தன் கணவர் சத்யநாராயணனிடம் எவ்வளவோ சொல்லியும், அவர் கேட்பதாக இல்லை. ஆனால், அவருக்கு முதல் ஸ்ட்ரோக் (மாரடைப்பு) வந்தபோது உயிர் உலுக்கப்பட, புகையின் விளைவை உணர்ந்து அதைக் கைவிட்டார்.

2005-ல் சத்யநாராயணனின் மரணம் நிகழ்ந்தது. ஆனால், துயரம் நின்றபாடில்லை. நளினி ‘பாஸிவ் ஸ்மோக்கிங்’கால் பாதிக்கப்பட்டார். அதாவது, புகைபிடிப்பவர் வெளியிடும் புகையை அவர் அருகில் இருப்பவர்கள் சுவாசிக்க நேர்வதால் ஏற்படும் ஆரோக்கியப் பிரச்னை. அப்படி அவர் கணவர் இடைவிடாமல் வெளியிட்ட புகை, நளினிக்குத் தொண்டைப் புற்றுநோயைத் தந்திருந்தது. ஆனாலும் அதிலிருந்து மீண்டு, புகைப்பழக்கம் பற்றிய விழிப்பு உணர்வைத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்வது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சலிங் வழங்குவது, புற்றுநோய் தீவிரத்தால் பேச்சையே இழந்த நிலையிலும் புல்லாங்குழல் வாசிப்பது என வாழ்ந்துவரும் நளினி சத்யநாராயணன், பாசிட்டிவ் பெண்மணி. தற்போது பெங்களூரில் வசிக்கும் நளினி புற்றுநோய் பாதிப்பால் குரலை இழந்துவிட்டதால், ஒலியற்ற, ஆனால் காற்றாலான வார்த்தைகளில் பேசுகிறார். அதிகம் சிரமம் கொடுக்காமல், அவரிடம் எழுத்திலேயே பதில்கள் பெற்றோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick