ஹார்ட் அட்டாக்? - இனி எளிதாக அறியலாம்!

சொக்கலிங்கம், இதயநோய் நிபுணர்

‘உலகிலேயே மிக அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது இந்தியாவில் தான்’ என்கிறது உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வு ஒன்று. `உண்மையில், மாரடைப்பு போன்ற இதயநோய்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளும் தவிர்க்கக் கூடியவையே! ஆனால், அவற்றைச் சரியாக அடையாளம் காணாததால் அல்லது அலட்சியப்படுத்துவதால் தான் பலரும் இதயக் கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள்’ என்கிறார்கள் மருத்துவர்கள். மருத்துவத் தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில், இதற்குப் பல்வேறு பரிசோதனைகளும் வந்துவிட்டன. அவற்றில் ஒன்றுதான் ‘ஸ்ட்ரெஸ் டெஸ்ட்’ (Stress Test).  சிலருக்கு மாரடைப்புப் பிரச்னை ஆரம்பநிலையில் இருக்கும். ஆனால், அறிகுறிகள் வெளியில் தெரியாது. இ.சி.ஜி எடுத்துப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த நிலையில் உள்ளவர்களுக்கு ‘ஸ்ட்ரெஸ் டெஸ்ட்’ உதவியாக இருக்கும். இதனால் ஆரம்பநிலையிலேயே இதய அடைப்புகளைக் கண்டறிந்து, மாரடைப்பு பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick