நூறாண்டு காலம் வாழ்க

``ராஜாவுக்கு ஏன்தான் இப்படி நடக்குதுன்னே தெரியல... ஏற்கெனவே செம்பாவால தொல்லை. இப்ப விவேக்கும் ஏமாத்திட்டான்... இந்த இடத்துலயா தொடரும் போடணும்” என சீரியலைப் பார்த்தாலும் கவலைப்பட்டுப் புலம்பும் ஆளா நீங்கள்? உங்கள் வாழ்க்கையின் சில ஆண்டுகள் காணாமல் போகலாம். காரணம், இதுபோன்ற தேவையற்ற கவலைகள். இப்படி நம் வாழ்க்கையை நீட்டிக்கவும் குறைக்கவும் பல விஷயங்கள் உண்டு. அவற்றைப் பற்றி உலக அளவில் பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன; நடக்கின்றன. அவற்றிலிருந்து சில சுவாரஸ்ய விஷயங்கள் உங்களுக்காக...

- கார்க்கிபவா

* நடக்காமல் இருந்தால் வரும் பிரச்னைகளில் ஒன்று உடல் பருமன். பருமனான உடலைக் கொண்டவர்களின் வாழ்வு 14 ஆண்டுகள் வரை குறையலாம். வயது அதிகமானவர்கள் உடல் பருமனைத் தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

* யேல் பல்கலைக்கழகம் வயதாவதைப் பற்றிக் கவலைப்படும் மக்களைப் பற்றி ஓர் ஆராய்ச்சி நடத்தியது. அதன்படி, வயதாவதைக் கண்டுகொள்ளாத ஆட்கள் 7 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கிறார்களாம். “அய்யோ வயசாயிடுச்சே” எனக் கவலைப்படுகிறவர்களுக்குக் குறைகிறதாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick