தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 8வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

தொடர்ச்சியாக, மருத்துவ உலகின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மேதைகளைப் பற்றிப் பார்த்து வருகிறோம். இது கொஞ்சம் போரடிக்கலாம்.  நாம் பேசவந்த விஷயங்களை விட்டுச் சற்றே விலகிப்போவது போலத் தோன்றலாம். ஆனால், தொற்று நோய்களின் உலகத்தைத் தரிசிக்க வேண்டுமென்றால், அது தொடர்பான நம்பிக்கைகள், படிப்படியாக நிகழ்ந்துள்ள மாற்றங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்று தொற்று நோய் மருத்துவம் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியிருக்கிறது. பல கொள்ளை நோய்களை இந்த உலகத்தை விட்டே விரட்டியிருக்கிறோம். ஆனால், ஒரு நோயை ஒழித்தால் இன்னொரு புதுநோய் உருவாகிறது. அது பல உயிர்களைக் காவு வாங்குகிறது. இதைத் தவிர்க்க முடியாதுதான். நாம் வாழ்வது பாக்டீரியாக்களின், வைரஸ்களின், கிருமிகளின் உலகத்தில். ஆனால், இந்த மேதைகள் போட்டுத் தந்திருக்கும் பாதைகளில் அதற்கான தீர்வுகளைத் தேடலாம். அதற்காகவேனும் அந்த மேதைகளையும் அவர்கள் செய்த ஆராய்ச்சிகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick