சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டி.நாராயண ரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்

ர் இசை நிகழ்ச்சியில் பாடகர், இசைக்கருவிகளை இசைப்பவர்கள் அனைவரும் ஒரு புள்ளியில் சங்கமமானால்தான் நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும். அதேபோலத்தான் செக்ஸும். ஆண், பெண் இருவரும் விருப்பத்தோடு இணைந்து ஈடுபட்டால்தான் பரஸ்பர இன்பம் சாத்தியமாகும். என் மருத்துவமனைக்கு ஒருவர் வந்திருந்தார். வயது 40. ``டாக்டர், என் மனைவி செக்ஸுக்கு கூப்பிட்டா வர மாட்டேங்கிறா. ரொம்ப விரக்தியாகப் பேசுறா’’ என்று முறையிட்டார். ``அதுக்கு உங்க மனைவி என்ன காரணம் சொல்றாங்க?’’ என்று கேட்டேன். அவர் ஒரு நிமிடம் மௌனம் காத்தார்.  பிறகு, `` `செக்ஸுல எனக்கு எந்த சுகமும் கிடைக்கறதில்லை. என்னைத் தூண்டிவிட்டுட்டு, நீங்க சீக்கிரமாக முடிச்சுக்கிறீங்க’ என்கிறாள்.’’ ``நீங்க எவ்வளவு நேரம் செக்ஸில் ஈடுபடுவீங்க?’’ என்று கேட்டேன். ``எனக்குக் கொஞ்ச நேரத்துலேயே விந்து வெளியேறிடுது. அதனால...’’ என்று தலையைச் சொரிந்துகொண்டே இழுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick