வியர்வை வெப்பம் வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்!

ஹெல்த்

ரக்கமற்ற இடி. மிரட்டும் மின்னல். மேகம் கறுத்த அடுத்த நொடி, வீட்டிற்குள் ஒளிந்து கதவைத் தாழிட்டுக் கொள்பவர்கள்தாம் இங்கே அதிகம். ஆயினும், அரைகுறை ஆர்வத்துடன் ஜன்னல் அருகே நின்றுகொண்டு மழையின் அழகை அவர்கள் ஒரு நொடியேனும் ரசிப்பார்கள். “நல்ல மழை. வெயில் குறையும்” என்று மழைக்கு உள்ளிருந்து ஆதரவு கொடுப்பார்கள். இப்படி மழையில் நனையாமலே அதைப் பற்றிச் சிலாகிப்பவர்கள், வெயிலில் நடந்து கொண்டே அதைத் தூற்றுவார்கள். மழை, கவிதை எழுத வைக்கும். வெயில் புலம்ப வைக்கும்!

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அடுத்த நூற்றாண்டில் மனித இனத்திற்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கப்போவது இந்த வெயில்தான். ஜுரம் வந்த பூமிக்கு உரிமையாளர்களான நாம் இதுவரை எந்த வைத்தியமும் செய்யாததால் வருடா வருடம் அதன் வெப்ப நிலை வெப்பமானியின் மெர்குரியை அதன் அதிகபட்ச நிலையிலேயே வைத்து அலறச் செய்து கொண்டிருக்கிறது. உலகின் வெப்பமான வருடங்கள் பட்டியலில் பத்தில் ஒன்பது வருடங்கள், கடந்த 2000ம் ஆண்டிற்குப் பிறகே வந்திருக்கின்றன. செயற்கைக்கோள் புகைப்படங்கள் கூறும் தரவுகளின்படி, பூமி தனது பனிப்போர்வையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது. கடலில் அதைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த நூறு வருடங்களில், இதனால் கடல் நீர் மட்டம் ஏழு அங்குலங்கள் (178 மிமீ) உயர்ந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடின் அளவும் காற்றில் அதிகரித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick