ஸ்டார் ஃபிட்னெஸ்: ஃபங்ஷனல் ட்ரெயினிங்... வீகன் டயர்... தக்காளி மசாஜ்...

பூஜா தேவரையாவின் அசத்தல் ஆரோக்கியம்!

‘இறைவி’ படத்தில் மலராக மனம் கவர்ந்த பூஜா தேவரையா, அடுத்து ‘ஆந்திரா மெஸ்’, ‘வல்லவனுக்கு வல்லவன்’ ஆகிய படங்களில் பிஸி. ரோயிங் படகுப் போட்டியில் தேசிய சாம்பியனான இவருக்குக் கடந்த ஆண்டு போட்டியின்போது ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டது. அதிலிருந்து மீண்டவர் சிறு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் சினிமாவுக்குள் வந்திருக்கிறார்.

“ஜிம்முக்குப் போகுறது எனக்குப் பிடிக்காது.  அதுல என்ன லாஜிக் இருக்குன்னே எனக்குத் தெரியலை. பாடி டெவலப்பிங்குக்கு ஜிம் போகலாம். ஃபிட்னெஸுக்கு ஜிம் வொர்க் அவுட் அவசியமில்லாத ஒண்ணு” என்று தொடங்கினாலும் ஃபிட்னெஸில் பூஜாவுக்கு அத்தனை ஆர்வம். “ஃபிட்னெஸைப் பொறுத்தவரை ‘Functional Training’ முறையை நான் பின்பற்றுவேன். இது, வாக்கிங், ஸ்கிப்பிங், பிஸிக்கல் ட்ரெயினிங்னு சாதாரணமா வீட்ல பண்ணக் கூடிய பயிற்சிகள்தான். இதுதான் எனக்கு ஈஸியா இருக்கு. காலையில ஒரு மணிநேரம் நடைப்பயிற்சி போறதை வழக்கமா வெச்சுருக்கேன். சில நாள்களில் Functional Training முறை சலிப்பை ஏற்படுத்தலாம். அப்போ தினமும் காலையில் யோகா மற்றும் தியானம்  பண்ணுவேன். விடுமுறை நாள்கள்ல சைக்கிளிங், ட்ரெக்கிங் மாதிரியான விஷயங்கள் பண்றது  உடம்புக்கு மட்டுமில்லாம, மனசுக்கும் நல்லது. வேலைப்பளு காரணமா வொர்க் அவுட் பண்ண முடியாதவங்க, தினமும் அரைமணிநேரம் நடைப்பயிற்சி செய்யறது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick