மாதவிடாய்க் காலத்திலும் மாரடைப்பு வரலாம்! - எச்சரிக்கும் எஸ்.சி.ஏ.டி

சு.ராஜேஷ்குமார், இதய நோய் நிபுணர்

பெண்களுக்கெல்லாம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு... இதுவரை அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தோம். மருத்துவமும், அதற்கான அறிவியல் காரணங்களைச் சொல்லி விளக்கம் கொடுத்திருந்தது. சில வருடங்களுக்கு முன்னர்வரை அது சரியாகவும் இருந்தது. ஆனால், சமீபத்திய நிகழ்வுகள் அதற்கு நேரெதிராக இருக்கின்றன. ஆண்களை மட்டுமே தாக்கி வந்த பல நோய்கள் இன்று பெண்களைத் தாக்கிக்கொண்டிருக்கின்றன. மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எனப் பெண்கள்தாம் அதிகமாகப் புற்றுநோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பது மாரடைப்பு!

‘மாதவிடாய் காலம் முடியும் வரை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு’ என்னும் மருத்துவ நம்பிக்கையையே தகர்த்துக் கொண்டிருக்கிறது `ஸ்பான்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்ஸெக்‌ஷன்’ (Spontaneous Coronary Artery Dissection - SCAD) என்னும் இதய பாதிப்பு. பெண்கள்அதிலும் இளம் பெண்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மாரடைப்பு ஏற்படுவதற்கு உடலில் அதிகக் கொழுப்பு சேர்வது, புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், வாழ்வியல் மாற்றங்கள், உணவுப் பழக்கங்கள்... எனப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இளம் பெண்களுக்கு ஏற்படும் எஸ்.சி.ஏ.டி பாதிப்புக்கு என்ன காரணம்... இந்தப் பிரச்னையால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick