பிரசவ பயம் (Tokophobia)

ருவுறுதல் என்பது எல்லாப் பெண்களுக்குமே சந்தோஷ நிகழ்வாக அமைவதில்லை. சிலருக்கு வேறுவிதமான அனுபவமாகவும் அமைந்துவிடுகிறது. சில பெண்களுக்குப்  பிரசவத்தைப்பற்றி நினைத்தாலே பயம் பற்றிக்கொள்ளும். இதுவும் ஒரு வகை போபியாதான். ‘டோக்கோபோபியா’. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பிரசவிக்கவே பயப்படுவார்கள். இந்த பயத்திற்கான காரணம் இரண்டு விதமாகப் பார்க்கப்படுகிறது. முதல்முறையாகப் பிரசவ அனுபவத்தைச் சந்திக்கிற பெண்களுக்கு ஏற்படுகிற பயம் ஒருவகை. ஏற்கெனவே கருக்கலைப்பு போன்ற எதிர்மறையான நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படுகிற பயம் இன்னொரு வகை. 70 சதவிகிதம் பேர் இரண்டாம் வகை காரணத்தினாலேயே பீதிக்குள்ளாகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick