கன்சல்ட்டிங் ரூம்

என்னுடைய இரண்டரை வயது குழந்தை, மலச்சிக்கலால் அவதிப்படுகிறாள். மருத்துவர்கள், ‘லேக்ஸேட்டிவ்’ வகை  மருந்தைப் பரிந்துரை செய்கிறார்கள். ஆனால், கடந்த சில தினங்களாக மாத்திரை பயன்படுத்தியபிறகும் அவளால் சரியாக மலம் கழிக்க முடியவில்லை. என்ன காரணமாக இருக்கும்? மாத்திரை கொடுப்பதைத் தொடரலாமா, வேண்டாமா?

- வெண்ணிலா, விரகனூர், மதுரை

மலச்சிக்கல் குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னைதான். பதற்றப்படத் தேவையில்லை. தாய்ப்பாலில் இருந்து சாதாரண உணவுக்குக் குழந்தை மாறும்போது, முதலில் சிலநாள்கள் அவர்களின் உடல் அதை ஏற்காமல், மலச்சிக்கலை உண்டாக்கி எதிர்ப்பைக் காட்டும். திடமான உணவு சாப்பிடத் தொடங்கும்போது, மலத்தின் அளவு அதிகரிக்கும்; அதேவேளையில் குடலின் இயக்கம் குறையும். சிலநேரம், குடற்புழுக்களாலும்கூட மலச்சிக்கல் ஏற்படலாம். தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைக்கு மலம் கழியாமல் இருந்தால், பால் சரியாகக் கிடைக்கவில்லை என்று அர்த்தம். இதுபோன்ற சூழலில், பிரச்னைக்கான காரணம் தெரியாமல் பெரியவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் சில மருந்துகளை குழந்தைக்குக் கொடுப்பது தவறு. என்ன காரணத்தால் மலச்சிக்கல் ஏற்பட்டது என்பதை அறிய குடல்பகுதியில் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் (Ultra Sound Scan) செய்துதான் பார்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick