மாத்திரைகள் - அறியாதவை ஆயிரம்

ஹெல்த் - ஸ்பெஷல் ஸ்டோரி

‘காய்ச்சலோ, தலைவலியோ, அரசு மருத்துவமனைக்குப் போனால் நீண்ட வரிசை  நிற்கும். தனியார் மருத்துவமனையில், ‘அந்த டெஸ்ட் எடு’, ‘இந்த டெஸ்ட் எடு’ என்று பெரிதாக இழுத்து விடுவார்கள்... இருக்கவே இருக்கிறது மெடிக்கல் ஷாப்... ரெண்டு மாத்திரையை வாங்கிப்போட்டால் முடிந்தது...’- இப்படித்தான் இருக்கிறது, நம்மில் பெரும்பாலானோரின் எண்ணம். கை, கால் வலியா, காய்ச்சலா, தலைவலியா, வாய்வுக்கோளாறா... எதுவாக இருந்தாலும் தட்டையாக இருக்கும் அந்த வெள்ளை மாத்திரை இடம் பெற்றுவிடுகிறது. சிலர், உடம்பில் எந்தப் பிரச்னை என்றாலும், ‘அந்த வெள்ளை மாத்திரையைக் கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

சிலர் பல வருடங்களுக்கு முன்னால் காய்ச்சல் என்று மருத்துவரிடம் சென்றிருப்பார்கள். அப்போது அவர் எழுதித்தந்த மருந்துச் சீட்டைப்  பத்திரமாக வைத்துக்கொண்டு, எப்போது காய்ச்சல் வந்தாலும் அதையே கொண்டுபோய் நீட்டி மாத்திரை வாங்கிச் சாப்பிடுவார்கள். பிறருக்குக் காய்ச்சல் வந்தால்கூட அந்த மருந்தைச் சீட்டைக் கொடுத்துக் கருணை காட்டுவார்கள்.

* இப்படி, மருத்துவரின் குறிப்பில்லாமல், ஆலோசனை இல்லாமல் நேரடியாக மருந்துக் கடைகளில்  மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடலாமா?

பழைய மருந்துச் சீட்டைப் பயன்படுத்தி மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடலாமா?

சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் என்று மருத்துவர்கள் தெளிவாக எழுதிக் கொடுத்தாலும்கூட, ‘அதெல்லாம் ஒண்ணும் பண்ணாது’, ‘மறந்துட்டேன் தப்பில்லை’ என்று மாத்திரைகளை மாற்றி மாற்றிச் சாப்பிடலாமா?

‘எனக்கு டீயோடு மாத்திரை போட்டாதான் உடனே கேக்கும்’, ‘என் மகனெல்லாம் வெறும் வாயிலயே மாத்திரையை மிட்டாய் மாதிரி கடிச்சுத் தின்பான்...’ - இது போன்று நம் இஷ்டத்துக்குக் குளிர்ந்த நீர், டீ, காபி போன்றவற்றுடன் மாத்திரைகளைச் சாப்பிடலாமா?

மாத்திரைகளைப் போட்டுக்கொண்டால் போதும், வழிமுறைகள் எல்லாம் அவசியம் இல்லையென்று அலட்சியமாக இருக்கலாமா?

இப்படி மாத்திரைகள் எடுத்துக்கொள்வதில் நமக்குள்ள அத்தனை சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் தருகிறார் பொது மருத்துவர் தேவராஜன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick