டாக்டர் நியூஸ்!

குழந்தைகளுக்குப் புத்தகங்களை அறிமுகப்படுத்தவேண்டும் என்று ஓர் ஆசிரியர் நினைத்தாராம். அவர்களையெல்லாம் நூலகத்துக்கு அழைத்துச்சென்று, 'விருப்பம்போல் படியுங்கள்' என்றாராம். குழந்தைகளும் ஓடிச்சென்று புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார்களாம்.

சில நிமிடங்களுக்குப்பிறகு, அவர்கள் அந்த ஆசிரியரிடமே ஓடிவந்தார்கள். ‘மிஸ், எங்களால எந்தப் புத்தகத்தையும் படிக்கமுடியலை' என்றார்கள். காரணம், அவர்கள் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டவில்லை. மொபைல்போன், டேப்ளெட் கருவிகளோடு வளர்ந்த அவர்கள் வலமிருந்து இடமாகப் புத்தகங்களை ஸ்வைப் செய்துபார்த்திருக்கிறார்கள்; அது வேலைசெய்யவில்லை என்றதும் புத்தகங்களைத் தூரவைத்துவிட்டார்கள். இது நகைச்சுவைக் கதை இல்லை. உலகம் முழுக்கப் பல நூலகங்களில் இந்தக் காட்சியைத் தினந்தோறும் பார்க்கமுடிகிறதாம். சமீபத்தில் ப்ரைட்டனில் நடைபெற்ற ஆசிரியர்கள் கருத்தரங்கில் இந்த விஷயம் தீவிரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.

ஒருபக்கம், மின்புத்தகங்கள் வளர்ந்துகொண்டிருக்கின்றன; அவற்றின்மூலம் ஏராளமான குழந்தைகளுக்குப் படிக்கும் பழக்கம் அதிகரிக்கிறது; சொல்வளம் பெருகுகிறது; ஆனால் இன்னொருபக்கம், நவீன கருவிகளைப் பார்த்து வளர்ந்த குழந்தைகள் பாரம்பர்யமான புத்தகங்களைப் பார்த்துக் குழம்புகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick