யார் என்று தெரிகிறதா? - ஆளைக் காட்டும் ஆளுமை உளவியல்

மாறுபட்ட மனநிலை கொண்ட மனிதர்கள் சூழ வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவர்களின் மாறுபட்ட குணாதியங்களை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களை, ‘டைப் ஏ பர்சனாலிட்டி’, ‘டைப் பி பர்சனாலிட்டி’ என இரண்டுவிதமாகப் பிரிக்கலாம் என்கிறார்கள் உளவியாளர்கள்.

இவர்களின் இந்தக் குணாதிசயங்கள், உடல் ஆரோக்கியத்தையே தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன என்கிறது ஓர் ஆய்வு. `ஒருவரின் குணத்துக்கும் உடல் நலனுக்கும் எப்படித் தொடர்பு இருக்க முடியும் என்கிற கேள்வி எழலாம்.  இதை  உண்மை என்று அடித்துச் சொல்லும் அந்த ஆய்வு, யாருக்கெல்லாம் உடல் ஆரோக்கியம் கெடும் என்றும் எச்சரிக்கை கொடுக்கிறது. 1950-ம் ஆண்டில் இதய நோய் மருத்துவர்களான மேயர் ஃப்ரைடுமேன் (Meyar Friedman), ரே ரோஸன்மேன் (Ray Rosenman) ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்தது. 35 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட வயதினரிடம் எட்டரை ஆண்டுகள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  அவர்களது ஆய்வின்படி மனிதர்களை டைப் ஏ பர்சனாலிட்டி  மற்றும் டைப் பி பர்சனாலிட்டி  என வகைப்படுத்தியிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick