பாலூட்டுவதில் பல கேள்விகள்

வாணி ஷ்யாம் சுந்தர், மகப்பேறு மருத்துவர்

புத்தம் புதிதாக ஒரு பிஞ்சு உயிரைக் கைகளில் ஏந்தும்போது, இளம் அம்மாக்களுக்கு அந்தப் பாப்பாவுக்குப் பாலூட்டுவதில் பல சந்தேகங்கள் எழும். பாலூட்டச் சரியான பொஸிஷன் எது,  படுத்துக் கொண்டு பாலூட்டலாமா, காம்பில் புண்ணாகிவிட்டால் மருந்திடலாமா, பால் கட்டிக்கொண்டால் அதைப் பிள்ளைக்குக் கொடுக்கலாமா... இப்படி நீளும் சந்தேகங்களைக் களைகிறார், மகப்பேறு மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தர்.

* பிரசவத்துக்குப் பின் அம்மாவுக்கு மயக்கம் தெளிந்தவுடன் குழந்தைக்குப் பாலூட்ட ஆரம்பித்துவிடலாம். என்றாலும், அப்போது அம்மா சோர்ந்துபோய் இருப்பார் என்பதால், அவரை நிமிர்த்தி அமரவைத்து, யாராவது குழந்தையைக் கைகளில் ஏந்திக்கொண்டு, அம்மாவின் மார்புக்கருகில் கொண்டுசென்று பாலூட்ட வேண்டும். சிசேரியனான அம்மாக்களுக்கு இது வசதியாக இருக்கும். குழந்தையின் நாசி தாயின் மார்பில் அழுந்தும்போது அதற்கு மூச்சுவிட முடியாத சூழல் ஏற்படாதபடி கவனமாகப் பாலூட்டுவது மிக மிக முக்கியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick