நிலம் முதல் ஆகாயம் வரை... ரெய்கி என்னும் தொடுமுறை சிகிச்சை

யோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்

னித உடல் என்பது ஒரு தானியங்கி எந்திரமாகும். கண்களுக்குப் புலப்படாத, ஆரா என்னும் ஒளிவட்டம் நம் உடலில் இருக்கிறது. அந்த ஒளிவட்டமே நம்மையும் நம்மைச் சுற்றியும் உள்ள இயற்கையைப் பிணைக்கும் பாலமாக இருக்கிறது. கண்களுக்குப் புலப்படாத ஒளிவட்டத்தில் ஏழு முக்கிய சக்கரங்கள் உள்ளன. இந்தச் சக்கரங்கள் மூலம் உலகத்தில் உள்ள பிரபஞ்ச சக்தி, நம் உடலில் உள்ள உயிர் சக்தியுடன் இணைகிறது. இந்த ஓட்டம் தடையில்லாமல் இருந்தால் உடலானது இயற்கையுடன் ஒன்றி ஆரோக்கியமாக இருக்கும். தடைபட்டால் ஆரோக்கியம் பாதிக்கும். எந்தச் சக்கரத்தில் தடை ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அந்தத் தடையை விலக்கி  எல்லாச் சக்கரங்களையும் சமநிலையில் இயங்கச் செய்வதே `ரெய்கி’ சிகிச்சை.

மனித உடலில் நூற்றுக்கணக்கான சக்கரங்கள் இருந்தாலும், நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழு சக்கரங் கள் உள்ளன. அவையே மனிதனின் சக்தி நிலைக்கான ஊற்றுக்கண்கள். இந்த ஏழு சக்கரங்களுக்கெனத் தனித்தனியாக இடங்கள் குறிக்கப் பட்டாலும் அவை ஒரே இடத்தில் இருக்குமென்று சொல்ல முடியாது. சக்தி நிலையில் ஏற்படும் வளர்ச்சிக்கேற்ப அவை நகர்ந்து செல்கின்றன. இதேபோல் அக்குபஞ்சர் புள்ளிகள், மெரிடியன்கள், சூட்சும நாடிகள் போன்றவை மனித உடலில் உள்ளன. அவற்றைத் தூண்டுவதன் மூலம் உடலுக்குத் தேவையான சக்திகளைப் பெறமுடியும். சுவாசத்தை முறைப்படுத்தி,  ஆக்சிஜன் குறைபாட்டையும் சரிசெய்யமுடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick