நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 13 | Home Remedies for Menstrual Problems - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2018)

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 13

போப்பு, மருத்துவ எழுத்தாளர்

பெண், பருவமடைந்ததை அடுத்து அவளுக்குச் செய்யும் சடங்கு சம்பிரதாயங்களில் உள்ள அக்கறையை, அவளது உடல் ஆரோக்கியத்தில் நாம் யாரும் காட்டுவதில்லை. உடல் நல அம்சத்தில் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வந்த பல்வேறு பழக்கங்கள் தற்காலத்தில் முந்தைய தலைமுறையிடமிருந்து அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தப் படுவதில்லை. அவற்றைப் பத்தாம் பசலித்தனம் என்று பரவலாகக் கருதுகின்றனர்.

பொருளாதாரத் தேவையும் வாழ்வதற்கான போட்டியும் உடல் நலன்மீது காட்டும் அக்கறையைப் புறந்தள்ளச் சொல்கிறது. `அந்த நாளுக்காகக் கனவுகளை ஒத்திவைக்க முடியாது; சாடிக் குதித்து ஓட வேண்டும்’ என்கிறது `நாப்கின்’ விளம்பரம் ஒன்று. பழங்கால வழக்கப்படி மூன்று நாள்கள் மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்ற வாதத்தை ஒதுக்கி விடுவோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close