எல்லோருக்குமானது உலகம்! அன்பால் சாதிக்கும் ஜகதீஷ் | Motivational story of a Differently abled youth - Doctor Vikatan | டாக்டர் விகடன்

எல்லோருக்குமானது உலகம்! அன்பால் சாதிக்கும் ஜகதீஷ்

தன்னம்பிக்கை

க்கு என்கிற ஜகதீஷ்க்கு 27 வயது. டெட்ராப்லேஜிக் (Tetraplegic) குறைபாடு காரணமாகக் கை கால்களின் இயக்கத்தை இழந்தவர்.  என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டால், “மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சராகப் போறேன். அதுக்கு எனக்கு முழுத் தகுதியும் இருக்கு” என்கிறார்.

குழந்தையிடம் அசாதாரணமாக ஏதாவது குறைபாட்டை உணர்ந்து, மருத்துவரை அணுகும்போது என்ன பிரச்னை என்றே தெரியவில்லை என்று மருத்துவர்கள் கூறினால் எப்படி இருக்கும்? ஜகதீஷின் பெற்றோருக்குக் கிடைத்த அனுபவம் இதுதான். ஜக்குவிற்கு ஏற்பட்டிருப்பது டெட்ராப்லேஜிக் என்னும் மோட்டார் சென்சரி குறைபாடுதான் எனத் தெரிவதற்கே அவர்களுக்கு அதிகக் காலம் பிடித்திருக்கிறது. ஆனால், அதற்குப் பிறகு அவர்கள் செய்த சிகிச்சை என்ன தெரியுமா? ஜக்குவை மிகச் சிறந்த குழந்தையாக நடத்தத் தொடங்கியதுதான். “அம்மா அப்பாவுக்கு நான்தான் உலகத்துலயே பயங்கர ஜீனியஸ்” என்கிறார் ஜகதீஷ்.

4-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்த ஜகதீஷ், 5ம் வகுப்பிலிருந்து சிறப்புக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்ந்து பயங்கர சுட்டியாக வலம் வந்திருக்கிறார். கம்ப்யூட்டர் வகுப்புகள் வரத்தொடங்கிய காலம் அது. சாஃப்ட்வேர் என்றால் என்னவென்று கேட்ட இவரிடம், ‘உலகத்தை உங்க கைக்குள்ள கொண்டு வரதுதான் சாஃப்ட்வேர். எல்லாமே நீங்க அணுகுற தூரத்துக்குள்ள இருக்கும். இந்த உலகத்தை உங்க வீடா மாத்துறதுதான் சாஃப்ட்வேர்’ என்று சொல்லியிருக்கிறார் அப்பள்ளியின் கணினி ஆசிரியர். இரண்டு மாதங்கள் மட்டுமே அவர் பாடம் நடத்தியிருந்தாலும், அந்த ஆசிரியரின் வார்த்தைகளின் தாக்கம்தான் தன்னை வேறு இடத்துக்கு நகர்த்தியது என்கிறார் ஜகதீஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick