வாழ்க்கையை மீட்டுக் கொடுத்த விளையாட்டு!

வீல்சேரில் வெற்றியைத் தொட்ட கீர்த்திகாதன்னம்பிக்கை

``அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நாங்க போகாத ஆஸ்பத்திரி இல்லை; கும்பிடாத சாமி இல்லை. `என் பொண்ணை எப்படியாவது சரி பண்ணிடணும்’ங்கிற அங்கலாய்ப்புல கிட்டத்தட்ட நாலு வருஷம்  எங்கெங்கேயோ அலைஞ்சு திரிஞ்சோம். அந்தக் காலகட்டத்தில் எங்களோட ஒவ்வொரு நாள் ராத்திரியும் கண்ணீரிலேயே கரைஞ்சது. கடைசியாத்தான் `இதைச் சரிபண்ணவே முடியாது’ங்குற உண்மை எங்க புத்திக்குப் புரிஞ்சது. நாங்க சேர்த்துவெச்சுருந்த காசு, பணம் மட்டுமில்லை, எங்க கண்ணீரும் சுத்தமா காலி ஆகிருச்சு. நெருக்கமானவங்க சாவுக்குப் போகும்போது, கடமைக்குக்கூட கண்ணீர் எட்டிப் பார்க்காத அளவுக்கு வாழ்க்கை எங்களுக்கு மரத்துப்போயிருச்சு. `இனிமே அவ்வளவுதான்’னு இருந்த என் பொண்ணோட வாழ்க்கையை ஒரு விளையாட்டு ஒட்டுமொத்தமாக மாத்தும்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை...’’  பாலைவனத்தில் பூத்திருக்கும் ஒற்றைப் பூவைப்போல, துயரத்துக்கு மத்தியில் தன் மகள் கீர்த்திகாவை அணைத்துக்கொண்டு உதட்டோரம் மெல்லிய புன்னகையை உதிர்க்கிறார்  ஜெயமணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick