கவலையோடு சாப்பிடாதீங்க! | Healthy diet meals - Doctor Vikatan | டாக்டர் விகடன்

கவலையோடு சாப்பிடாதீங்க!

ஹெல்த்

*சாப்பாட்டுக்கு முன் சூப் அருந்துங்கள். அது உங்கள் வயிற்றை நிரப்பும். அதிகம் சாப்பிடுவதைத் தடுக்கும்.

*சாப்பிடும்போது சாப்பாட்டைத் தவிர வேறு சிந்தனைகள் வேண்டாம். உணவைப் பற்றிச் சிந்திப்பது உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும். செரிமானம் சீராகும்.

*சாப்பிடுவதற்கு முன்னரும் பின்னரும் நிறைய தண்ணீர் குடியுங்கள். இடையில் வேண்டாம்.

*சாப்பிட்ட உடனே தூங்கச் செல்ல வேண்டாம். தாமதமாகச் சாப்பிடுவதும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். நெஞ்செரிச்சலை உருவாக்கும்.

*இரவில் செரிமானத்துக்கு எளிதான உணவுகளை மட்டுமே உண்ணுங்கள். மாவுச்சத்தும், மசாலாக்களும், எண்ணெயும் நிறைந்த உணவுகள் செரிமானத்தைக் கடினமாக்குவதுடன் தூக்கத்தையும் கெடுக்கும்.

*ஒவ்வொரு வேளையும் நார்ச்சத்துள்ள உணவுகள் அவசியம் இடம்பெற வேண்டும். அவை மலச்சிக்கலைத் தவிர்க்கும்.

*சாப்பாட்டுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக கிரீன் டீ அல்லது பால் சேர்க்காத டீ குடிப்பது உங்கள் வயிற்றை செரிமானத்துக்குத் தயார்ப்படுத்தும்.

*உணவில் நிறைய புரதம் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள். அது சீக்கிரமே பசி உணர்வு எழுவதைத் தடுக்கும்.

*எப்போதும் சூடான உணவுகளையே சாப்பிடவும். உணவின் சூடு உங்கள் வயிற்றுத் தசைகளைத் தளர்த்தும்.

*மூன்று வேளை வயிறுமுட்டச் சாப்பிடுவதற்கு பதில் ஆறு வேளை குறைந்த அளவில் சாப்பிடுவது உங்கள் ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள்வைத்திருக்கும்.

*சாப்பிடும்போது கவலைகளை ஓரங்கட்டிவிடுங்கள். கவலையாக இருக்கும்போது உங்களையும் அறியாமல் நீங்கள் அதிகம் சாப்பிடுவீர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick