ஆட்டமா... போராட்டமா? - விளையாட்டிலும் வேண்டும் கவனம்!

லட்சுமணதாஸ், இதயநோய் மருத்துவர்ஹெல்த்

40 வயது நிறைந்த அவருக்கு சர்க்கரைநோய். ‘ஏதாவது ஒரு விளையாட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டால் ஆரோக்கியத்துக்கு நல்லது’  என்று சிலர் ஆலோசனை சொல்ல, சமீபகாலமாக பாட்மின்ட்டன் விளையாட ஆரம்பித்திருக்கிறார். ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும்போது  திடீரென்று கண்கள் இருட்டிக்கொண்டு வர, மயங்கிக் கீழே விழுந்துவிட்டார். உடனிருந்தவர்கள் பதறிப்போய் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னை இருப்பவர்கள் பாட்மின்ட்டன், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடக் கூடாதா... அப்படி ஈடுபட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick