நிலம் முதல் ஆகாயம் வரை... முத்திரை சிகிச்சை

யோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்

நோய்களை குணப்படுத்தவும், வராமல் முன்கூட்டியே தடுக்கவும் பயன்படுவது முத்திரை சிகிச்சை. இது, விரல்களைக்கொண்டு செய்யப்படுவது. யோகா, பிராணாயாமம், தியானம் மற்றும் பரதநாட்டியம் போன்றவற்றின்போது கைவிரல்களை அழுத்திப்பிடிக்கும் ஒரு நிலைதான் முத்திரை; உடலிலுள்ள உறுப்புகளுக்கு ஆற்றலைக் கொண்டு செல்லும் ஒரு வழிமுறை. மனித உடல் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச மகா பூதங்களை உள்ளடக்கியது. இவற்றில் எது ஒன்று சீராகச் செயல்படவில்லையென்றாலும் பிரச்னை ஏற்படும். அப்போது முத்திரை செய்வதால், நரம்பு மண்டலம் வழியாக ஆற்றல் தூண்டப்படும். மனம், உடல்ரீதியாக ஆற்றல் குறையும்போது முத்திரை செய்வதால் செல்கள் புதுப்பிக்கப்படும்.  

ஒவ்வொரு விரலும் பஞ்ச மகா பூதங்களின் வரிசையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் கட்டைவிரல், `நெருப்பு’ எனவும், ஆள்காட்டி விரல், `காற்று’ எனவும், நடுவிரல், `ஆகாயம்’ எனவும், மோதிர விரல், `நிலம்’ எனவும், சுண்டு விரல் `நீர்’ எனவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதற்குரிய முறைகளோடு விரல்களின் நுனிகளைக் கோத்து முத்திரை செய்வதால், உடலில் உள்ள பஞ்ச பூதங்கள் சமச்சீரடையும். மன ஆற்றல் மற்றும் படைப்பாற்றல் அதிகரிப்பதுடன் மனரீதியான பிரச்னைகளைப் போக்க உதவும். சில முத்திரை வகைகளைப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick