தீபாவளி இனிக்க இனிப்பைக் குறைங்க!

ஹெல்த்

தீபாவளி என்றாலே புத்தாடைகளும் பட்டாசுகளும் இனிப்புகளும்தாம் நம் நினைவில் வரும். அதிலும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்வது இனிப்புகளைத்தான். அந்த வகையில் இனிப்புகளுக்கு தீபாவளியில் அதிக முக்கியத்துவம் உண்டு. ‘பண்டிகைக் காலத்தில் அதிக இனிப்பு சாப்பிடக் கூடாது, டயட்டில் இருக்க வேண்டும்’ என்று சிலர் வைராக்கியமாக இருந்தாலும்கூட, அழையா விருந்தாளியாக இனிப்பு டப்பாக்கள் வீட்டுக்குள் வந்துவிடும். அப்படி வந்த இனிப்புகளின் நிறத்திலும் சுவையிலும் நாம் மயங்கிவிடுவோம். பிறகென்ன, இனிப்புகள் வாயை நிறைப்பதுடன் எச்சிலில் கரைந்துவிடும். இப்படி ஒரே நேரத்தில் அதிக இனிப்புகளை உட்கொள்வதால் உடலில் கலோரி அளவு அதிகரிக்கும். கலோரி அதிகரிப்பதால், உடலில் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம்.  அதிக கலோரிகள்கொண்ட தீபாவளி இனிப்புகளைச் சாமர்த்தியமாகத் தவிர்த்துவிட்டு, அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்க சில ஆலோசனைகள் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் வினிதா கிருஷ்ணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick