கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

எனக்கு வயது 30. என் கன்னங்கள் இரண்டிலும் சருமம் வெளிர் நிறத்துடன் காணப்படுகிறது. இது ரத்தச்சோகையின் அறிகுறியா... இதற்குத் தீர்வு என்ன?

- புவனா, சென்னை.


சருமத்தில் வெளிர்நிறத் திட்டுகள் ஏற்படுவதை ரத்தச்சோகையின் அறிகுறி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. சருமப் பிரச்னைகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம். முதலில், ரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவை பரிசோதித்துப் பாருங்கள். ஏழுக்கும் குறைவாக இருந்தால், நெல்லிக்காய், பேரீச்சை, கீரை வகைகள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பழக்கத்துக்கு மாறுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையோடு இரும்புச்சத்து மாத்திரையும் உட்கொள்ளவும். ஒருவேளை ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால், சரும மருத்துவரை அணுகுங்கள்.

- சீஜா, மகப்பேறு மருத்துவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!