“சிந்திப்பதை நிறுத்துவதுதான் குறைபாடு!”

நம்பிக்கை மனுஷி ராஜராஜேஷ்வரிதன்னம்பிக்கை

``இந்தியாவில் நோயாளி - மருத்துவர் விகிதம் குறைவு என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு நோயாளிக்குமான சிறந்த நோய் கண்டறிதல் முறை (Diagnosis) மற்றும் சிகிச்சை முறைகளைப் பல மருத்துவக் கருத்தரங்குகளில் பேசிவருகிறோம். நோயைக் கண்டறிவதற்கே அதிகம் செலவழித்துவிட்டு, நோய்க்கான சிகிச்சையைப் பெற முடியாமல்போகும் பலரை நாம் பார்த்திருப்போம். தனக்கு இந்தக் குறைபாடு அல்லது நோய் இருக்கிறது என்பதை அறிந்திருந்தும், சிகிச்சையளிக்கப் பணம் இல்லாமல் மன உளைச்சலுடன் தினசரி வேலைகளைத் தொடர்ந்துகொண்டிருப்பவர்கள், உங்கள் பக்கத்து நாற்காலியில்கூட அமர்ந்திருக்கக்கூடும்.  நோய் கண்டறிதல் தொழில்நுட்பத்தை எளிமையாக்குவதுதான் எங்கள் நிறுவனத்தின் பிரதான நோக்கம்” என்கிறார் ராஜராஜேஷ்வரி. `ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ (Artificial Intelligence) என்னும் செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் நோயைக் கண்டறிவதுடன், அதற்கான செலவைப் பத்தில் ஒரு மடங்காகக் குறைத்துவரும் `ஆர்டீலஸ்’ நிறுவனர்களில் ஒருவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick