"வெற்றி உயர்வைத் தரும் தோல்வி பக்குவத்தைத் தரும்!" - விஜய் ஆண்டனி | Actor Vijay Antony talks about Stress and ways to get rid of it - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

"வெற்றி உயர்வைத் தரும் தோல்வி பக்குவத்தைத் தரும்!" - விஜய் ஆண்டனி

மனசே மனசே...

துப்பாக்கியால் நம்மைச் சுட நினைப்பவர்களின் முன்னால் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு சரணடைவதுபோல் மனஅழுத்தம் வந்தால், அதனிடம் சரணடைந்துவிடவேண்டியதுதான். அதைச் சரி செய்வதற்காக, ‘இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன் என்று போனால், அவை வேறு மாதிரியான பிரச்னைகளைக் கொண்டுவந்துவிடும்’’ என்று தேர்ந்த மனநல ஆலோசகர்போலப் பேசுகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல துறைகளிலும் தடம்பதித்து வருபவர். மனஅழுத்தம் ஏற்படும் தருணங்களை எப்படிக் கடக்கிறார் என்பது குறித்து அவரிடம் கேட்டோம்.

“நான் சவுண்ட் இன்ஜினீயராகத்தான் சினிமாவில் வாழ்க்கையைத் தொடங்கினேன். ஆனால், எனக்குள் இருந்த இசை ஆர்வம், என்னை இசையமைப்பாளனாக மாற்றியது. என் முதல் பட வாய்ப்புக்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்தேன். ஒரு படத்துக்கான பாடல்கள் எல்லாம் ‘ஓகே’ ஆன நிலையில், கடைசி நேரத்தில் எனக்கு பதிலாக வேறு ஒருவருக்கு அந்தப் படத்தின் வாய்ப்பு போனது.

அன்றைக்கு ஏற்பட்ட துயரத்தையும் அழுத்தத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதன் பிறகு, நான் ஓர் இசையமைப்பாளனாக, நடிகனாக, இயக்குநராக வளர்ந்தேன். எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை முதல் தோல்விதான் எனக்குத் தந்தது. `வெற்றி உயர்வைத் தரும். தோல்வி  பக்குவத்தைத் தரும்’ என்பது அனுபவத்தில் நான் கண்ட உண்மை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க