"ஓட்டுநர்-நடத்துநர் நட்பு ஆத்மார்த்தமானது!" - நடத்துநர் கே.பிரபாகரன் | Balancing personal health and Profession - Bus Conductor K Prabhakaran - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

"ஓட்டுநர்-நடத்துநர் நட்பு ஆத்மார்த்தமானது!" - நடத்துநர் கே.பிரபாகரன்

உடலுக்கும் தொழிலுக்கும் 06

ந்த ஒரு விஷயத்தையும் நெருங்கிச் சென்று பார்க்கும்போதுதான் அதன் உண்மைநிலை புரியும். அதன் எல்லைக்கு வெளியே நின்று கவனித்தால், உண்மையை உணர முடியாது. அரசுப் பேருந்து நடத்துநரின் பணி அந்த வகையைச் சேர்ந்தது. ‘அவருக்கென்ன... அரசு வேலை, டிக்கெட் போட்டாலும் போடாட்டியும் கைநிறைய சம்பளம்’  என்பது போன்ற பார்வைதான் நடத்துநர்கள் குறித்து நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும். ஆனால் அருகே சென்று பார்த்தால், அந்த பிம்பம் சுக்குநூறாக உடைகிறது. ஓசூரிலிருந்து கோவை செல்லும் வழித்தடத்தில் அரசுப் பேருந்து ஒன்றில் நடத்துநராகப் பணியாற்றுபவர் கே.பிரபாகரன். 28 ஆண்டுகளாகப் பேருந்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து வாழ்க்கையில் பயணம் செய்துகொண்டிருக்கும் அவரைச் சந்தித்தோம்.

“ப்ளஸ் டூ முடித்ததும், நடத்துநர் உரிமம் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்தேன். பதிவு மூப்பு அடிப்படையில் நடத்துநராகப் பணியில் சேர்ந்தேன். விதிகளின்படி எங்களுக்கு எட்டு மணி நேர வேலைதான். ஆனால், நாங்கள் யாரும் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை பார்ப்பதில்லை. சில நேரங்களில் 24 மணி நேரம்கூட  தொடர்ந்து பணியாற்றவேண்டிய சூழல் ஏற்படும். ஓசூரிலிருந்து இரவு 9:50 மணிக்கு வண்டியை எடுத்தால், அடுத்த நாள் மதியம் இரண்டு மணிக்கு வண்டியிலிருந்து  இறங்குவோம். பல நேரங்களில் இரவு முழுக்கப் பயணம் நீளும். சுமார் 16 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். ஓசூரிலிருந்து கோவை சென்றதும், ஒன்று  அல்லது இரண்டு மணி நேர இடைவெளி கிடைக்கும். அந்த நேரத்தில் தூங்கலாம் என்று நினைத்தாலும் அதற்கென்று ஓய்வறைகள் கிடையாது. பேருந்திலேயே படுத்து, தூங்கிவிட்டு சரியான நேரத்துக்கு மீண்டும் வண்டியை எடுத்துவிடுவோம்.

[X] Close

[X] Close