தேஜஸ் ஸ்ரீ சிறப்புக் குழந்தையல்ல... தெய்வக் குழந்தை! | Tejassri, From Special Child to Super talent - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

தேஜஸ் ஸ்ரீ சிறப்புக் குழந்தையல்ல... தெய்வக் குழந்தை!

தன்னம்பிக்கை

தேஜஸ் ஸ்ரீ மேடைக்கு வந்துவிட்டால் போதும்... அரங்கமே ‘தேஜூ...தேஜூ... தேஜூ...’ என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிடுகிறது. அப்படியொரு வரவேற்பு தேஜூவுக்கு. சித்ரா, எஸ்.பி.பி-க்கெல்லாம் அவள் செல்லக் குழந்தை. அவள் பாடி முடித்ததும், எல்லோரின் கண்களிலும் கண்ணீர் அரும்புகிறது. சில நிமிடங்களுக்கு அந்த அரங்கில் தேஜூவின் குரலே நிரம்பியிருக்கிறது. ஆனால், இசையைத் தவிர வேறு எதையும் உணர முடியாது அவளால்.

“தேஜூவை இந்த மாதிரிப் பார்க்க ரொம்ப சந்தோஷமாயிருக்கு. ஆனா, இந்த அளவுக்குக் கொண்டு வருவோம்னு யோசிச்சதுகூட இல்லை. ரெண்டு வயசுவரைக்கும் அவளுக்குப் பேச்சே வரலை...”- தேஜூவின் அப்பா தத்தாத்ரேயன் கணபதி நெகிழ்ச்சியாகப் பேசுகிறார். சென்னை, கே.கே.நகரில் இருக்கிறது வீடு. துறுதுறுவென்று அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறாள் தேஜூ.

[X] Close

[X] Close