உப்பின் மீது ஈர்ப்பு ஏன்? | Salt craving: Reasons and solutions - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

உப்பின் மீது ஈர்ப்பு ஏன்?

ஹெல்த்

சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருக்கும் அனைவரும் அமைதியாகச் சாப்பிட, ஒருவர் மட்டும் அடிக்கடி உணவில் உப்பு தூவிக்கொள்கிறார் என்றால், அவருக்குச் சரியான அளவைவிட உப்பு அதிகம் தேவைப்படுகிறது என்று அர்த்தம். இதை ஆங்கிலத்தில் ‘சால்ட் கிரேவிங்’ (Salt Craving) என்கிறார்கள். உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக்கொள்ள பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவை...

சோடியம் பற்றாக்குறை
: ஒருவரது உடலில் சோடியத்தின் அளவு குறைவாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணம். இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காணவில்லை என்றால், நரம்பு தொடர்பான குறைபாடுகள், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஒருவருக்கு வழக்கத்துக்கு அதிகமாக வியர்க்கிறது என்றால், அவரது உடலில் நீர்ச்சத்து மற்றும் சோடியத்தின் அளவு குறைந்திருக்கலாம். மனஅழுத்தம், அதிக உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்வதால்கூட வியர்வை அதிகரித்து சோடியம் வெளியேறும். எனவே, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளின்போது அதிகமாக நீர் அருந்த வேண்டும்.

[X] Close

[X] Close