“வேலையே புண்ணியத்தை அள்ளிக் கொடுக்கிறது!” - நர்ஸ் தேவிகா ராணி | Balancing personal health and Profession - Nurse Devika Rani - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

“வேலையே புண்ணியத்தை அள்ளிக் கொடுக்கிறது!” - நர்ஸ் தேவிகா ராணி

உடலுக்கும் தொழிலுக்கும் - 6

‘உங்களுக்கு போகப் பிடிக்காத இடம் எது?’ என்று கேட்டால், ‘மருத்துவமனை’ என்று தயங்காமல் சொல்வோம். மருந்துகளின் வாடை, பலவிதமான நோயாளிகள், வலியால் துடிக்கும் மனிதர்கள்... என அங்கு நிலவும் சூழலே அசாதாரணமாக இருக்கும். ஆனால், மருத்துவர்களும் செவிலியர்களும் இதிலிருந்து மாறுபட்டவர்கள்; தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மருத்துவமனையிலேயே கழிப்பவர்கள். `சேவை’ என்ற வார்த்தையைக் கேட்டாலே நம் நினைவுக்கு வருபவர்கள் செவிலியர்கள்தாம். அன்றாடம் நோயாளிகளையும், அவர்கள் படும் வலிகள், வேதனைகளையும், பல இறப்புகளையும் எதிர்கொள்ளும் செவிலியரின் உடல்நலமும் மனநலமும் எப்படி இருக்கும்? தெரிந்துகொள்ள, மதுரை மாவட்டம், தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றும் தேவிகா ராணியைச் சந்தித்தோம்.