ஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 22 | Parenting tips - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

ஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 22

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

ந்த இதழிலும் 5 முதல் 6 வயதுவரையான குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் பற்றிதான் சொல்லப் போகிறேன். இதுவரை வேலியில்லாத உலகத்துக்குள் வாழ்ந்து வந்தவர்கள், இந்த வயதிலிருந்துதான் ஒரு வட்டத்துக்குள் வரப்போகிறார்கள். அதாவது, எல்.கே.ஜி படிக்கும்வரை மழலைகளாகப் பார்க்கப்பட்டவர்கள், யு.கே.ஜி-யில் அடியெடுத்து வைக்கும் இந்த வயதில் ‘ஸ்டூடன்ட்’ ஆவார்கள். ‘நிலா நிலா’ என்று பாடிக்கொண்டிருந்தவர்கள் எழுத்து, ஒழுங்கு மாதிரியான விஷயங்களுக்குள் என்ட்ரி ஆவார்கள். `ஊரோடு ஒத்து வாழ்’ என்கிற பருவத்துக்குள் குழந்தைகள் நுழைகிற வயதும் இதுதான். பக்குவம், பழக்கம், படிப்பு என்கிற மூன்று புதிய விஷயங்களைப் பிள்ளைகள் ஏற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள். இவற்றுடன் பாசம் மற்றும் பாதுகாப்பு என்கிற இரண்டு விஷயங்களையும் நீங்கள் சேர்த்துக்கொள்ளுங்கள்.