பாய்சனாகுமா பாரசிட்டமால்? | tips for dosage of paracetamol - Doctor Vikatan | டாக்டர் விகடன்

பாய்சனாகுமா பாரசிட்டமால்?

இளங்கோவன், குழந்தைநல மருத்துவர்ஹெல்த்

குழந்தைக்குக் காய்ச்சல் எனில், உடனே பாரசிட்டமால் கொடுக்கும் பெற்றோர்கள், அதன் அளவு மற்றும் மருந்து கொடுக்கும் இடைவேளைகளை கவனத்தில்கொள்வதில்லை. இது  ஆபத்தானது. பாரசிட்டமாலைப் பொறுத்தவரை, அதன் அளவு மிக முக்கியம். அனைத்து வயதினருக்குமே, மிக முக்கியமாகக் குழந்தைகளுக்கு, அதிகபட்சம் இவ்வளவுதான் அளிக்க வேண்டும் என்கிற அளவுகோல் இருக்கிறது. அந்த அளவு, குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப அதிகமாகாது; மாறாக, குழந்தைகளின் எடைக்கேற்றபடிதான் அதிகமாகும். தரவேண்டிய அளவைவிட அதிகம் கொடுத்தால், மருந்தாக இருக்கவேண்டிய பாரசிட்டமாலே நஞ்சாக மாறிவிடும். அதேபோல, எத்தனை மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்கச் சொல்லி மருத்துவர் பரிந்துரைக்கிறாரோ, அதற்குக் குறைவான இடைவேளைகளில் கொடுக்கக் கூடாது. அளவுக்கு அதிகமாகக் குழந்தைக்கு பாரசிட்டமால் கொடுத்தால், அது பிஞ்சுக் குழந்தைகளின் கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளை பாதித்துவிடும். அரிதாக, உயிரையும் பறித்துவிடலாம். இதைத்தான் மருத்துவர்கள், ‘பாரசிட்டமால்  பாய்சனிங்’ என்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick