“வாழ்க்கை எனக்குச் சொன்ன சீக்ரெட்!” - ‘செரிப்ரல் பால்சி’ நோயை மீறி சாதித்த சுந்தரி

தன்னம்பிக்கை

``ஏழு வயசுவரைக்கும் என்னால சுயமாக நடக்க முடியாமப் போனதால சோர்ந்துபோன எங்கம்மாவும் அப்பாவும் எத்தனையோ டாக்டர்ஸ், ஹாஸ்பிடல்ஸ்னு என்னைக் கூட்டிட்டுப் போயிட்டு இருந்தாங்க. அப்படித்தான் ஒருமுறை சென்னையில இருக்குற அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்திருந்தோம். பெருசா எந்த முன்னேற்றமும் இல்லைனு கிளம்பினப்போ, ஒரு அம்மா வந்து, ‘ஒரு டாக்டர் இருக்காங்க... அவங்களை மட்டும் பார்த்துட்டுப் போங்க. நிச்சயம் நல்லது நடக்கும்’னு சொன்னாங்க. அவங்க ரொம்ப வலியுறுத்திச் சொன்னதால அம்மாவும் அப்பாவும் என்னை அவங்க சொன்ன டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. அந்தச்  சந்திப்புதான், என் வாழ்க்கையில பெரிய திருப்புமுனை!’’ - தன் வாழ்க்கையை, ஒரு கதைபோலச் சொல்ல ஆரம்பிக்கிறார் சுந்தரி சிவசுப்பு. செரிப்ரல் பால்சியால் பாதிக்கப்பட்டவர். தன் குறைபாட்டைக் கடந்து பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு, வேலை என்று வெற்றிகரமாக முன்னேறியவர், அந்த வாழ்க்கைப் பயணத்தை ‘A Bumblebee’s Balcony’ என்ற ஆங்கிலப் புத்தகமாக எழுதி, வெளியிட்டிருக்கிறார். விட்ட கண்ணியிலிருந்து சுவாரஸ்யம் கோத்துத் தொடர்ந்தார் சுந்தரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick