வலி தீர வழி என்னவோ? | ways to relieve back pain - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வலி தீர வழி என்னவோ?

ரமேஷ் கண்ணா, பிசியோதெரபிஸ்ட்ஹெல்த்

டினமானதோ, எளிதானதோ எந்த வேலையைச் செய்தாலும் சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செய்தால்தான் புத்துணர்வோடு இயங்க முடியும். நின்றுகொண்டே வேலை செய்பவர்களுக்கு சிறிது நேரம் உட்கார்வது ஓய்வு. அதிலும் சேரிலோ, சுவரிலோ முதுகைச் சாய்த்து உட்காரும்போது ஒரு நிம்மதி கிடைக்கும். உட்கார்ந்துகொண்டே வேலை செய்பவர்களுக்கு சிறிது தூரம் நடப்பதும், உடலைச் சாய்த்துப் படுப்பதும்தான் இதம். இதற்கான சரியான அர்த்தத்தைத் தேடினால், நாள் முழுவதும் நம் உடலைத் தாங்கும் முதுகுப் பகுதிக்கு ஓய்வு கொடுப்பதாகத்தான் இருக்கும். உடலிலிருக்கிற ஒட்டுமொத்தத் தசைகளின் அழுத்தமும் ஒருசேர முதுகுத்தண்டில்தான் குவிகிறது. அதனால்தான், மனிதனாகப் பிறந்த அனைவரையுமே ‘முதுகுவலி’ ஒருமுறையாவது பதம் பார்த்துவிடுகிறது. ‘முதுகுவலி சரியாக என்ன செய்யலாம், எந்த டாக்டரிடம் அப்பாயின்மென்ட் வாங்கலாம்’ என யோசித்துக்கொண்டிருப்பவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே அதைச் சமாளிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார் பிசியோதெரபிஸ்ட் ரமேஷ் கண்ணா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick