டாக்டர் நியூஸ்! | Doctor News - Doctor Vikatan | டாக்டர் விகடன்

டாக்டர் நியூஸ்!

தகவல்

இதயப் பிரச்னை தீர அக்கறையான மனிதர்கள் தேவை!

தய அதிர்ச்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் பெரிய அதிர்ச்சியாக அமையும். இதுவரை தங்களை யாராலும் அசைக்க இயலாது என்பது போன்ற தன்னம்பிக்கையுடனும் கம்பீரத்துடனும் இருந்தவர்கள், திடீரென்று இந்த உலகம் தங்களை நோயாளிகளைப்போல பார்ப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். தங்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள முடியாமல் தடுமாறுவதுடன், ஏதாவது நடந்துவிடுமோ என்று திகைக்கிறார்கள். `இந்த நிலைமையைச் சமாளிக்க அவர்களுக்கு உதவும் மிகப் பெரிய விஷயம், சுற்றியிருப்பவர்களின் அக்கறைதான்’ என்கிறது சமீபத்திய ஆய்வு. இங்கிலாந்திலுள்ள போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இதயப் பிரச்னைகளுக்குச் சிகிச்சை பெறுவோருடன் அன்பாகப் பேசுவதும் இதமான அணுகுமுறையும்  மிகப் பெரும் நன்மைகளைத் தருவது தெரியவந்துள்ளது. மேம்பட்ட உரையாடல்கள், நிபுணர்களின் ஆலோசனைகள், அவர்கள் தங்களுடைய புதிய அடையாளத்தை ஏற்றுக்கொள்ள உதவும். தனி நபர் ஆதரவு, சமூக ஆதரவு மற்றும் உணர்வுகளில் கவனம் செலுத்தும் பராமரிப்பு போன்றவற்றின் மூலம் அவர்கள் அதிர்ச்சியைச் சமாளித்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப உதவும். என்னதான் மருந்துகள், சிகிச்சைகள் இருந்தாலும், அன்பான பேச்சுகளும் அக்கறையான மனிதர்களும் இதயத்துக்குத் தேவைப்படுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick