பிசியோதெரபி - ஏன் எதற்கு எப்படி?

ன்றைக்கு மருத்துவத்தில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது `இயன்முறை மருத்துவம்’ எனப்படும் பிசியோதெரபி (Physiotherapy). `பாட்டிக்கு முதுகுவலி. ஒரு வாரம் பிசியோதெரபி எடுத்துக்கிட்டோம். இப்போ பரவாயில்லை’ போன்ற வசனங்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிகிறது. சிற்றூர்களில்கூட `பிசியோதெரபி மையங்கள்’ முளைத்துவிட்டன. சரி, அது என்ன பிசியோதெரபி? எலும்பு மூட்டு, தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டால், அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் சிகிச்சை. ஊசி, மருந்துகளைப் பயன்படுத்தாமல் உடற்பயிற்சி, தெரபியூடிக் மசாஜ் (Therapeutic Massage), வெப்ப சிகிச்சை, மின் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு வழிமுறை. உடலில் அடிபட்டால் காயத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், பாதிப்பிலிருந்து மீளவும் இது உதவும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick