“ஆசிரியர் பணி இப்போதெல்லாம் நிறைவைத் தருவதில்லை!!” - கவிஞர் அ.வெண்ணிலா | a.vennila talks about health care - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

“ஆசிரியர் பணி இப்போதெல்லாம் நிறைவைத் தருவதில்லை!!” - கவிஞர் அ.வெண்ணிலா

உடலுக்கும் தொழிலுக்கும் - 3

விஞர், பெண்ணியவாதி, நாவலாசிரியர்  எனப் பல முகங்கள் அ.வெண்ணிலாவுக்கு உண்டு... கூடவே ஆசிரியர் என்ற முகமும். 28 ஆண்டுகள் ஆசிரியப் பணியில் அனுபவமுள்ளவர். தற்போது வந்தவாசி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். 2007-ம் ஆண்டு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். தற்போதைய இளைஞர்கள் பணி விருப்பங்களில் தங்களது இறுதித் தேர்வாகத்தான் ஆசிரியர் தொழிலை வைத்திருக்கிறார்கள். ஆனால், ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்துடன் பள்ளிக்குள் நுழைந்தவர் வெண்ணிலா.