காமமும் கற்று மற! | Sexual awareness series - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

காமமும் கற்று மற!

கூடற்கலை - 3

விடுமுறையில் வந்திருந்த
மனைவியும் மகளும் வீடு திரும்பிட
.....

மறதியாய் வாங்கிவந்த
மல்லிச்சரம்
வீடு பூராவும் நிறைந்திருக்கிறது
மௌனமாய் என்னோடு.

- அன்பாதவன்

ரு விவாகரத்து நடக்க என்னவெல்லாம் காரணம் இருக்க முடியும்? வரதட்சணை, மாமியார் கொடுமை, கணவனின் டார்ச்சர்... இப்படிச் சொன்னால், நீங்கள் இன்னும் அப்டேட் ஆகவில்லை என்று அர்த்தம். இப்போதெல்லாம் விவாகரத்துக்கு முக்கியக் காரணமாக இருப்பது ஆண்மைக் குறைவு. ஆண்மைக் குறைவு என்பதற்கு ஓர் ஆண் `அதற்குக் கையாலாகாதவன்’ என்று அர்த்தமல்ல. குழந்தை பெறும் அளவுக்கு வீரியம்கொண்டவனாக இருந்தாலும், ஆணின் ஆண்மை அதைக்கொண்டு உறுதி செய்யப்படாது. ஒரு பெண்ணை முழுமையாகத் திருப்திப்படுத்துவதற்கும், கர்ப்பம் தரிக்கச் செய்வதற்கும் வேறுபாடு உண்டு.