இதுவும் கடந்து போகும்! | actress kushboo sharing about life experiences - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

இதுவும் கடந்து போகும்!

மனசே மனசே...

``இன்றையச் சூழலில், மனஅழுத்தம் இல்லாத வாழ்க்கை என்பது இங்கே யாருக்கும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை, மனஅழுத்தம் தரக்கூடிய எந்த விஷயத்தையும் எனக்குள் ஏற்றிக்கொண்டது கிடையாது. அதே நேரம் சூழ்நிலைகளால் ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸைப் போக்கிக்கொள்ள நான் பின்பற்றுகிற ஒரே விஷயம்... ‘இதுவும் கடந்து போகும்’ என்ற ஒற்றைவரி மந்திரம் மட்டும்தான்! வாழ்வின் கடினமான சூழ்நிலைகளின்போது, ‘இதுவும் கடந்து போகும்’ என்ற இயல்பான மனப்பான்மை மட்டும்தான் என்னை மீட்டுக்கொண்டு வந்திருக்கிறது!’’ சீரியஸாகப் பேச ஆரம்பிக்கிறார் நடிகை குஷ்பு. வாழ்க்கையில் தனக்கு உச்சக்கட்ட ஸ்ட்ரெஸ்ஸைக் கொடுத்த வலி நிறைந்த அனுபவத்தையும் அதைக் கடந்துவந்த கதையையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.