அட்ரீனல் சுரப்பி இல்லை... ஆனாலும் சாதனைகள் தொடர்கதை! | motivational story - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

அட்ரீனல் சுரப்பி இல்லை... ஆனாலும் சாதனைகள் தொடர்கதை!

தன்னம்பிக்கை

“நிறைய சாதிக்கணும்ங்கிறது என் ஆசை. நான் நீண்ட நாள் வாழணும் என்பது எங்கம்மாவின் பிரார்த்தனை. ரெண்டுமே நிறைவேறிட்டு வருது’’ எனக் கண்களிலும் சிரிக்கிறார், கடலூரைச் சேர்ந்த ஏஞ்சலின் ஷெரிலின். பிறப்பிலேயே அட்ரீனல் சுரப்பி இல்லாமல், 17 வருடங்களாக மரணத்துடன் போராடிவருபவர். இந்த நிலையிலும் நடனத்தில் ஏழு முறை உலக சாதனை, அறுபதுக்கும் மேற்பட்ட தமிழகப் பாரம்பர்யக் கலைகளைக் கற்றிருப்பது என வாழும் ஒவ்வொரு நாளுக்கும் அர்த்தம் சேர்த்துக்கொண்டிருக்கும் தன்னம்பிக்கைப் பெண்.