தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 24வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

ஹெச்.ஐ.வி-யை முழுமையாகக் குணப்படுத்த இன்றளவும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்; முழுமையாகக் குணப்படுத்த முடியாது.  சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மாத்திரைகள் சாப்பிடும்போது, சில நாள்கள் மாத்திரைகளைச் சாப்பிடாமல் விட்டால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. ஆனால், ஹெச்.ஐ.வி அப்படியல்ல. வைரஸின் தன்மை மாறிக்கொண்டேயிருப்பதால்  சரியான நேரத்துக்கு, சரியான அளவில் மருந்து எடுத்துக்கொள்ளாவிட்டால் பாதிப்பு அதிகமாகிவிடும். அந்தச் சின்ன இடைவெளியில் வைரஸ் தன்னைத் தகவமைத்துக்கொண்டுவிடும். மாத்திரைகளைக் கொஞ்சம் காலம்தாழ்த்திச் சாப்பிடுவதுகூட ஆபத்துதான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick