டாக்டர் நியூஸ்!

தகவல்

`சராசரி வயதிலுள்ள ஒருவர் நாள்தோறும் ஆறு முதல் எட்டு மணி நேரம்வரை தூங்க வேண்டும்’ என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. `அதைவிட அதிகமாகத் தூங்கினால் என்ன ஆகும்?’ என்பதை அண்மையில் ஆய்வொன்று கண்டறிந்திருக்கிறது. சர்வதேச அளவில் பல்லாயிரம் பேர் மத்தியில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வின்படி, சராசரி அளவைவிட அதிகம் தூங்குகிறவர்களுக்கு இதயம் சார்ந்த பிரச்னைகள் வரும் வாய்ப்பு கணிசமாக அதிகரிப்பது தெரியவந்துள்ளது. தினசரித் தூக்கத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, இந்த ஆபத்தும் அதிகரிக்கிறதாம். பொதுவாக, `பகல் நேரத் தூக்கம் தவறானது’ என்பார்கள். ஆனால், இரவு நேரத்தில் சரியாகத் தூக்கம் வராதவர்கள், பல காரணங்களால் இரவில் அதிகம் தூங்க இயலாதவர்கள் பகல் நேரத்தில் சிறிதளவு தூங்குவதன் மூலம் அதைச் சரிசெய்துகொள்ளலாம் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இரவு நேரத்திலும் போதுமான அளவு தூங்கிவிட்டு, பகல் நேரத்திலும் தூங்குவதைக் குறைப்பது நலம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick