டாக்டர் 360: ரத்தம்... ஒரு பயணியின் கதை!

ரேவதிராஜ் ரத்தவியல் மருத்துவர்ஹெல்த்

``ரத்தத்தின் முக்கியப் பகுதிப் பொருளாக ரத்தச் சிவப்பணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளையணுக்கள் (White Blood Cells), பிளேட்லெட்ஸ் (Platelets), பிளாஸ்மா (Plasma) ஆகியவை இருக்கின்றன. எலும்பு மஜ்ஜையிலுள்ள ஸ்டெம் செல்கள்தாம் ரத்த அணுக்களை உற்பத்திசெய்கின்றன. ஸ்டெம் செல்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான், ரத்த அணுக்களின் உற்பத்தி சீராக இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ஒரு தடவை உற்பத்தியாகும் ரத்தச் சிவப்பணுக்கள் 120 நாள்களும், வெள்ளையணுக்கள் இரண்டு நாள்களும், பிளேட்லெட்டுகள் 10 நாள்களும் ரத்த ஓட்டத்தில் இருக்கும். இவற்றில் ஏதாவது ஒன்றில் குறைபாடு ஏற்பட்டால், ரத்தம் தொடர்பான நோய்கள் உண்டாகும். ரத்தம் தொடர்பாக மட்டும் 70-க்கும் மேற்பட்ட நோய்கள் இருக்கின்றன. முக்கியமான சில நோய்கள் பற்றிப் பார்ப்போம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick