மறதிநோய்க்கு ‘வெல்கம்’ சொல்லலாமா? - சுகர் அலர்ட்

சி.பி.ராஜ்குமார், சர்க்கரைநோய் மருத்துவர்ஹெல்த்

ர்க்கரை, நம் உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அது ஸ்நாக்ஸோ, சாப்பாடோ ஏதாவது ஓர் இனிப்புச்சுவை நமக்கு அவசியமாக இருக்கிறது.  இயற்கையிலேயே இனிப்புச்சுவை நிறைந்த பழங்களை ஜூஸாக்கிச் சாப்பிடும்போதுகூட, அதில் சர்க்கரை கலந்தே குடிக்கிறோம். இப்படி, நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுப் பொருள்களில் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குச் சர்க்கரை அதிகமிருக்கிறது. அண்மையில், ‘அமெரிக்கன் ஒபிசிட்டி சொசைட்டி’ (American Obesity Society) மேற்கொண்ட ஆய்வின் முடிவும் இதை உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக, உலகம் முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோர், கடந்த 30 ஆண்டுகளில் 30 சதவிகிதத்துக்கும் அதிகமாகச் சர்க்கரையைச் சேர்த்துக்கொள்வது தெரியவந்திருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick